Latest Videos from YouTube

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்த சொகுசு பஸ் இயக்கச்சியில் கவிழ்ந்தது : மூவர் பலி, 20 பேர் படுகாயம்!

[postlink] http://tamilkaraokez.blogspot.com/2012/07/20_22.html[/postlink]

யாழ்ப்பாணத்திலிருந்து சனிக்கிழமை இரவு கொழும்பு நோக்கி வந்த பயணிகள் சொகுசு பஸ் ஒன்று இயக்கச்சியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு கவிழ்ந்ததில் மூவர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். 42 பயணிகளுடன் கொழும்பு நோக்கி மிகவேகமாக வந்து கொண்டிருந்த இந்த பஸ், இயக்கச்சி சந்தி வளைவில் திரும்பியபோது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது.

இதனால் பஸ் மூன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் குத்துக்கரணமடித்துள்ளதாகவும் பஸ்ஸிலிருந்த பயணிகளில் வயோதிபர்களான ஆணொருவரும் பெண்ணொருவரும் மற்றொருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இரவு சுமார் 10 மணியளவில் இந்த விபத்து நடைபெற்ற போது இந்த பஸ்ஸின் பின்னால் வந்த பஸ்ஸிலிருந்தவர்கள் விபத்துக்குள்ளான பஸ் வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததை பார்த்துள்ளனர்.
இதையடுத்து அவர்களும் வேறு பஸ்களில் வந்தவர்களும் விபத்துக்குள்ளான பஸ்ஸிலிருந்தவர்களை மீட்டதுடன், பின்னர் அங்கு வந்த படையினரின் உதவியுடன் படுகாயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதி காயமடைந்த நிலையில் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்த சொகுசு பஸ் இயக்கச்சியில் கவிழ்ந்தது : மூவர் பலி, 20 பேர் படுகாயம்!

[postlink] http://tamilkaraokez.blogspot.com/2012/07/20.html[/postlink]

யாழ்ப்பாணத்திலிருந்து சனிக்கிழமை இரவு கொழும்பு நோக்கி வந்த பயணிகள் சொகுசு பஸ் ஒன்று இயக்கச்சியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு கவிழ்ந்ததில் மூவர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். 42 பயணிகளுடன் கொழும்பு நோக்கி மிகவேகமாக வந்து கொண்டிருந்த இந்த பஸ், இயக்கச்சி சந்தி வளைவில் திரும்பியபோது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது.

இதனால் பஸ் மூன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் குத்துக்கரணமடித்துள்ளதாகவும் பஸ்ஸிலிருந்த பயணிகளில் வயோதிபர்களான ஆணொருவரும் பெண்ணொருவரும் மற்றொருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இரவு சுமார் 10 மணியளவில் இந்த விபத்து நடைபெற்ற போது இந்த பஸ்ஸின் பின்னால் வந்த பஸ்ஸிலிருந்தவர்கள் விபத்துக்குள்ளான பஸ் வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததை பார்த்துள்ளனர்.
இதையடுத்து அவர்களும் வேறு பஸ்களில் வந்தவர்களும் விபத்துக்குள்ளான பஸ்ஸிலிருந்தவர்களை மீட்டதுடன், பின்னர் அங்கு வந்த படையினரின் உதவியுடன் படுகாயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதி காயமடைந்த நிலையில் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நீதிவானுக்கு அமைச்சர் அச்சுறுத்தல்: சி.ஐ.டி விசாரணைக்கு ஜனாதிபதி பணிப்பு!

[postlink] http://tamilkaraokez.blogspot.com/2012/07/blog-post_7850.html[/postlink]

மன்னார் நீதவானுக்கு அமைச்சர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையின் சிறப்பு குழுக்கள் விசாரணைகளை நடத்திவருவதாக பொலிஸ் பேச்சாளர் எஸ்.பி.அஜித் ரோஹண கூறினார்.

நீதவான் ஏற்கெனவே வழங்கிய உத்தரவொன்று தொடர்பில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர் தன்னை அச்சுறுத்தியதாக மன்னார் நீதவான் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அதன்படி, குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். முன்னைய சந்தர்ப்பங்களிலும் நீதவானுக்கு அமைச்சர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நீதித்துறைச் செயற்பாடுகளில் தலையிட்டிருப்பதாகவும் முறையிடப்பட்டுள்ளது.
இதேவேளை,மன்னார் நீதவானை இடமாற்றுவதற்கான முயற்சிகளிலும் அமைச்சர் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இந்தப் பின்னணியில் நாட்டின் நீதித்துறையில் அரசியல்வாதிகளின் நேரடித் தலையீடுகளைக் கண்டித்து சட்டத்தரணிகள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் நீதித்துறைச் செயற்பாடுகள் முடங்கிப் போயிருந்தன.இந்த நிலையிலேயே ஜனாதிபதியின் உத்தரவு வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் தொடர்பில் தொலைபேசி தகவல்களை பெற்றுக் கொள்வத ற்கான நீதிமன்ற உத்தரவை பொலிஸார் பெற்றுள்ளதாகவும், அதன்படி ஆரம்ப கட்டமாக தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட தகவல்கள் ஆராயப்பட்டு அதன்பின்னர் அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டு உறுதியானால் ;அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.இதேவேளை ;நீதவானை அச்சுறுத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட அமைச்சரவை அமைச்சர் றிசாத் பதியூதீன் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அமைச்சருக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களும் சில இடங்களில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு வைத்தியர்களை பதிவு செய்யக் கோரிக்கை!

[postlink] http://tamilkaraokez.blogspot.com/2012/07/blog-post_22.html[/postlink]

இலங்கையில் பணியாற்றும் வெளிநாட்டு வைத்தியர்கள் சுமார் 300 பேரினதும் விவரங்களைப் பதிவு செய்து ஒழுங்குபடுத்துமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சைக் கோரியுள்ளது. இலங்கையில் பணியாற்றும் வைத்தியர்கள் அனைவருமே இலங்கை மருத்துவச்சபையில் பதிவுசெய்துள்ளனர். ஆனால் இலங்கையில் பணியாற்றும் வெளிநாட்டு வைத்தியர்கள் அதாவது இந்தியாவைச் சேர்ந்த சுமார் 300 வைத்தியர்களும் இலங்கை மருத்துவச் சபையில் பதிவு செய்யவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அதிகாரிகளின் தரம் பயிற்சி நிலைகள் என் பனபற்றிய உண்மைத் தரவுகள் எவையுமே தெரியாத நிலையிலேயே அவர்கள் இங்கு பணியாற்றுகின்றார்கள். சில வைத்தியர்கள் நிபுணர்கள் என்ற நிலையிலிருந்து இங்கு பணியாற்றுகின்றார்கள். அதன் உண் மைத் தன்மை தெரியவராமல் உள்ளது.
இங்கு வைத்தியராகப் பணியாற்றும் ஒருவர் என்ன நிலையிலிருந்து பணியாற்ற முற்படுகிறாரோ அந்த நிலையில் அல்லது சிறப்புத் துறையில் அவரது தகுதிபற்றி இங்கு அதற்கென உள்ள ஒவ்வொரு பிரிவு நிலை அதிகாரிகளாலும் உறுதிசெய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர்.
எனவே இந்தியாவிலிருந்து வந்துள்ள இந்த 300 வைத்தியர்களின் விவரங்களைப் பதிவு செய்து ஒழுங்கு படுத்துமாறு மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சைக் கோரி யுள்ளது. இலங்கைச் சட்டத்தின் சில பலவீனங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டு வைத்தியர்கள் இங்கு பணி யாற்றுகின்றனர் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

பூஸா முகாமுக்கு மாற்றுவதை நிறுத்தி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்க : தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை!

[postlink] http://tamilkaraokez.blogspot.com/2012/07/blog-post.html[/postlink]

கொழும்பு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பூஸõவுக்கு மாற்றுவதை உடனடியாக நிறுத்தி இக் கைதிகளை பொது மன்னப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் அல்லது ஒரு வருட புனர்வாழ்வு வழங்கி சமூகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கும்படி அரசியல் கைதிகளின் பெற்றோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உருக்கமான கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

அவ் கடிதத்தின் சாராம்சம் வருமாறு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இருந்தும் இதனால் எதுவித பலனும் ஏற்படவில்லை. மன்னார், வவுனியா, யாழ்ப்பாணத்தில் விஷேட நீதிமன்றங்களை ஏற்படுத்தி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை துரிதப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. கடந்த மாதம் 28ஆம் திகதி தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒரு வருட புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப் போவதாகத் தெரிவித்து கைதிகளிடம் ஒப்புதல் கடிதமும் பெறப்பட்டது. ஆனால் இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் பாதுகாப்புச் செயலாளர் இம் மாதம் 17 ஆம் திகதி விளக்கமறியலிலுள்ள கைதிகள் அனைவரையும் பூஸா முகாமுக்கு மாற்றும்படி சுற்று நிரூபம் அனுப்பி வைத்துள்ளாராம். இதை தடுத்து நிறுத்தும்படி உங்களை தயவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.
பூஸா முகாம் எமது பிள்ளைகளுக்கு பாதுகாப்பானதல்ல. அத்துடன் பொருளாதாரத்தில் நலிவுற்ற எமக்கு எமது பிள்ளைகளைப் பார்க்க பூஸா முகாமுக்கு சென்று வரமுடியாது. எனவே பூஸா முகாமுக்கு இடம் மாற்றுவதை இடைநிறுத்தி எமது பிள்ளைகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறு அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Tamil Karaoke - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger