யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்த சொகுசு பஸ் இயக்கச்சியில் கவிழ்ந்தது : மூவர் பலி, 20 பேர் படுகாயம்!

[postlink] https://tamilkaraokez.blogspot.com/2012/07/20_22.html[/postlink]


யாழ்ப்பாணத்திலிருந்து சனிக்கிழமை இரவு கொழும்பு நோக்கி வந்த பயணிகள் சொகுசு பஸ் ஒன்று இயக்கச்சியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு கவிழ்ந்ததில் மூவர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். 42 பயணிகளுடன் கொழும்பு நோக்கி மிகவேகமாக வந்து கொண்டிருந்த இந்த பஸ், இயக்கச்சி சந்தி வளைவில் திரும்பியபோது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது.

இதனால் பஸ் மூன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் குத்துக்கரணமடித்துள்ளதாகவும் பஸ்ஸிலிருந்த பயணிகளில் வயோதிபர்களான ஆணொருவரும் பெண்ணொருவரும் மற்றொருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இரவு சுமார் 10 மணியளவில் இந்த விபத்து நடைபெற்ற போது இந்த பஸ்ஸின் பின்னால் வந்த பஸ்ஸிலிருந்தவர்கள் விபத்துக்குள்ளான பஸ் வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததை பார்த்துள்ளனர்.
இதையடுத்து அவர்களும் வேறு பஸ்களில் வந்தவர்களும் விபத்துக்குள்ளான பஸ்ஸிலிருந்தவர்களை மீட்டதுடன், பின்னர் அங்கு வந்த படையினரின் உதவியுடன் படுகாயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதி காயமடைந்த நிலையில் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Tamil Karaoke - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger