பூஸா முகாமுக்கு மாற்றுவதை நிறுத்தி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்க : தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை!

[postlink] https://tamilkaraokez.blogspot.com/2012/07/blog-post.html[/postlink]


கொழும்பு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பூஸõவுக்கு மாற்றுவதை உடனடியாக நிறுத்தி இக் கைதிகளை பொது மன்னப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் அல்லது ஒரு வருட புனர்வாழ்வு வழங்கி சமூகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கும்படி அரசியல் கைதிகளின் பெற்றோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உருக்கமான கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

அவ் கடிதத்தின் சாராம்சம் வருமாறு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இருந்தும் இதனால் எதுவித பலனும் ஏற்படவில்லை. மன்னார், வவுனியா, யாழ்ப்பாணத்தில் விஷேட நீதிமன்றங்களை ஏற்படுத்தி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை துரிதப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. கடந்த மாதம் 28ஆம் திகதி தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒரு வருட புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப் போவதாகத் தெரிவித்து கைதிகளிடம் ஒப்புதல் கடிதமும் பெறப்பட்டது. ஆனால் இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் பாதுகாப்புச் செயலாளர் இம் மாதம் 17 ஆம் திகதி விளக்கமறியலிலுள்ள கைதிகள் அனைவரையும் பூஸா முகாமுக்கு மாற்றும்படி சுற்று நிரூபம் அனுப்பி வைத்துள்ளாராம். இதை தடுத்து நிறுத்தும்படி உங்களை தயவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.
பூஸா முகாம் எமது பிள்ளைகளுக்கு பாதுகாப்பானதல்ல. அத்துடன் பொருளாதாரத்தில் நலிவுற்ற எமக்கு எமது பிள்ளைகளைப் பார்க்க பூஸா முகாமுக்கு சென்று வரமுடியாது. எனவே பூஸா முகாமுக்கு இடம் மாற்றுவதை இடைநிறுத்தி எமது பிள்ளைகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறு அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Tamil Karaoke - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger