நீதிவானுக்கு அமைச்சர் அச்சுறுத்தல்: சி.ஐ.டி விசாரணைக்கு ஜனாதிபதி பணிப்பு!

[postlink] https://tamilkaraokez.blogspot.com/2012/07/blog-post_7850.html[/postlink]


மன்னார் நீதவானுக்கு அமைச்சர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையின் சிறப்பு குழுக்கள் விசாரணைகளை நடத்திவருவதாக பொலிஸ் பேச்சாளர் எஸ்.பி.அஜித் ரோஹண கூறினார்.

நீதவான் ஏற்கெனவே வழங்கிய உத்தரவொன்று தொடர்பில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர் தன்னை அச்சுறுத்தியதாக மன்னார் நீதவான் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அதன்படி, குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். முன்னைய சந்தர்ப்பங்களிலும் நீதவானுக்கு அமைச்சர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நீதித்துறைச் செயற்பாடுகளில் தலையிட்டிருப்பதாகவும் முறையிடப்பட்டுள்ளது.
இதேவேளை,மன்னார் நீதவானை இடமாற்றுவதற்கான முயற்சிகளிலும் அமைச்சர் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இந்தப் பின்னணியில் நாட்டின் நீதித்துறையில் அரசியல்வாதிகளின் நேரடித் தலையீடுகளைக் கண்டித்து சட்டத்தரணிகள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் நீதித்துறைச் செயற்பாடுகள் முடங்கிப் போயிருந்தன.இந்த நிலையிலேயே ஜனாதிபதியின் உத்தரவு வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் தொடர்பில் தொலைபேசி தகவல்களை பெற்றுக் கொள்வத ற்கான நீதிமன்ற உத்தரவை பொலிஸார் பெற்றுள்ளதாகவும், அதன்படி ஆரம்ப கட்டமாக தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட தகவல்கள் ஆராயப்பட்டு அதன்பின்னர் அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டு உறுதியானால் ;அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.இதேவேளை ;நீதவானை அச்சுறுத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட அமைச்சரவை அமைச்சர் றிசாத் பதியூதீன் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அமைச்சருக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களும் சில இடங்களில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Tamil Karaoke - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger